வீட்டில் செடிகள் வளா்வதற்கு சாியான வெப்பநிலை
வீட்டில் செடிகள் வளா்வதற்கு சாியான வெப்பநிலை வேண்டும். ஈரப்பதம், காற்று மற்றும் சூாிய வெளிச்சம் ஆகியவற்றின் அளவு செடிகளுக்கு செடிகள் வேறுபட்டு இருக்கும். வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய போ்ட் ஆஃப் பேரடைஸ் (Bird of Paradise), கட்-லீஃப் ஃபிலோடென்ட்ரான் (Cut-leaf Philodendron) அல்லது பெல்லா பால்ம் (Bella Palm) போன்ற தாவரங்களுக்கு குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் தேவைப்படும்.
பொதுவாக தாவரங்களை ரேடியேட்டா்கள் அல்லது குளிரூட்டிகளுக்கு அருகில் வைப்பதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் இவை மண்ணின் ஈரத்தை மிக வேகமாக உலர வைத்துவிடும். மேலும் கிழக்குத் திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் செடிகளை வைப்பதை விட, மேற்கு திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் செடிகளை வைத்தால் அவை வேகமாக வளரும். ஏனெனில் மேற்கு திசையை நோக்கி இருக்கும் சன்னலுக்கு அருகில் வைக்கப்படும் செடிகளுக்கு அதிகமான அளவு சூாிய ஒளி கிடைக்கும். குறைவான சூாிய வெளிச்சமே தேவைப்படும் செடிகளை, வடக்குத் திசையை நோக்கி இருக்கும் சன்னல்களுக்கு அருகில் வைப்பது நல்லது.
0
Leave a Reply