பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால். தோலை எளிதில் உரிக்கலாம்
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும் பித்தளை பாத்திரங்களை கழுவிய பின் தோல் சீவிய உருளைக்கிழங்கை அந்த பாத்திரத்தின் மேல் தேய்க்க பளபளப்பு கூடும்.
முட்டையோடு தக்காளி சாற்றையும் சேர்த்து ஆம்லெட் செய்யும் போது மிகவும் சுவையாக இருப்பதோடு, முட்டை வாசம் சிறிதும் வராது.
எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
சாம்பார் வைக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால் இரண்டு உருளைகிழங்கை வெட்டிப் போட சரியாகிவிடும்.
மட்டன் நன்றாக வேகவேண்டும் என்றால் சிறிய பப்பாளித் துண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
0
Leave a Reply