உலக ஜூனியர் பாட்மின்டனில், இந்தியாவெற்றி.
கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில், மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, 'எச்' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ ), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று இரண்டாவது போட்டியில் இலங்கையை சந்தித்தது. இதில் இந்திய அணி 2-0 (45-27, 45-21) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் உன்னாதி ஹூடா, ரக்ஷித்தா ஸ்ரீ உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
0
Leave a Reply