பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா 30.10.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 ஆகிய உரிமஸ்தலங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது .
எதிர்வரும் 30.10.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இணைப்பில் கண்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமஸ்தலங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது.
2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (License and Permit) Rules, 1981-ன்படி 30.10.2025 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1), F.L-2 மற்றும் F.L-3 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (License and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply