ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா
பிரான்சில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் இந்தியாவின் ஜோதி பங்கேற்றார். நேற்று நடந்த ரெபி சேஜ் போட்டியில் பந்தய தூரத்தை 13.17 வினாடியில் அடைந்த ஜோதி, 4-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
ஆண்களுக்கான 3000 மீட்டர் டீபிள்சேஸ் ஒட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சபில்,. தகுதிச் சற்றில் 8 நிமிடம் 15.43 வினாடி 5வது இடம் பிடித்த இவர் பைனலுக்கு முன்னேறினார். பைனலில் இலக்கை 5 நிமிடம் 14.18 வினாடியில் கடந்த அவினாஷ் 11 வது இடம் பிடித்தார்..
ஒலிம்பிக் மல்யுத்தம் அரையிறுதியில் இந்தியாவின் அமன் ஷெராவத் தோல்வியடைந்தார். நேற்று ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு பிரீஸ் டைல் போட்டி நடந்தன். இந்தியா சார்பில் அமன் ஹெராவத் வயது 21 களமிறங்கினார். முதல் சுற்றில் வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிரை சந்தித்தார். 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் அல்பேனியாவின் ஜெலிம்கான் அபாகரோவை எதிர்கொண்டார். 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் ஐப்பான் வீரர் ரெய்ஹிகுச்சியிடம் 0- 10 என தோல்வியடைந்தார்.
ஹரியானாவை சேர்ந்தவர் வினேஷ் போகத், இவரை பாராட்டி, ஹரியானா முதல்வர் நயாப்சிங் செய்னி வெளியிட்ட செய்தியில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் சிறப்பாக செயல்பட்டார். சில காரணங்களால் பைனலில் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கு உரிய பரிசு, கவுரவம் அளிக்கப்படும். என தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் தாயகம் திரும்பினார். இவருக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது.
0
Leave a Reply