பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் நேற்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதின. 9வது நிமிடம் ஸ்பெயின் வீரர் ஜோஸ் மரியா அடித்த பந்தை, இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து கைகொடுத்தார்.
29வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பொனால்டி கார்னர் வாய்ப்பை அமித் தோஹிதாஸ் வீணடித்தார். முதல் பாதி முடிய 21 வினாடி இருந்த போது மீண்டும் பொனால்டி கார்னர் கிடைத்தது. இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் துல்லியமாக அடித்து கோலாக மாற்றினார். முதல் பகுதியில் போட்டி 1-1 என சமனில் இருந்தது.
இரண்டாவது பாதியில் போட்டியின் 33 வது நிமிடம் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது. மீண்டும் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. கோல் அடிக்க முயற்சித்தனர் ஸ்பெயின் வீரார்கள். இருப்பினும் சீனியர் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷை தாண்டி, கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியது. வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணியினர்.
0
Leave a Reply