ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய வீரர்கள்
2021 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நிரஜ் சோப்ரா, அவினாஷ் சபிள் (ஸ்டீபிள் சேஸ்) உள்ளிட்டோர் பிரான்சின் பாரிசில் ஒலிம்பிக் போட்டியில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
தமிழகத்தின் டிரிபிள் ஐம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், உலகளவில் 23வது இடம் பெற்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். 2022 பர்மிங்காம் காமன் வெல்த் விளையாட்டில் 17.02 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி வென்ற டிரிபிள் ஐம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், 21வது இடம் பிடித்து, ஒலிம்பிக் தகுதி பெற்றார். இருவரும் தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு, பைனலுக்கு முன்னேறுகின்றனர்.
ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி, 60 கிலோ மீட்டருக்கும் மேல் எறிந்த முதல் இந்திய வீராங்கனை என கடந்த 2017-ல் சாதித்தார் 2023 ஆசிய விளையாட்டில், 62.92 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் கைப்பற்றினார். இவர், உலகத் தரவரிசையில் 21வது இடம் பெறு, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இதுதவிர குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (23 வது இடம்) வீராங்கனை அபாகதுவா (23வது இடம்) 100 மீட்டர் தடை ஓட்ட வீராங்கனை ஜோதி (34 வது இடம்) 5000 மீட்டர் ஓட்ட வீராங்கனை பாருல் சவுத்ரி (34வது இடம்) உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் (23 வது இடம்) தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
0
Leave a Reply