தெற்காசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் புதிய சாதனை
தெற்காசிய ஜீனியர் தடகளத்தில் முதல் நாளான நேற்று இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் கைப்பற்றியது. தெற்காசிய ஜீனியர் தடகள் சாம்பியன்ஷிப் 4வது சீசன், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. இந்தியாவின் 62 வீரர் வீராங்கனை உட்பட மொத்தம் 210 பேர் பங்கேற்கின்றனர். முதலில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சித்தார்த் சவுத்ரி அனராக் சிங் களமிறங்கினார்.
நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.19 மீட்டர் தூரம் எறிந்த சித்தார்த் சவுத்ரி, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். தவிர தெற்காசி ஜீனியர் தடகளத்தில் இது புதிய சாதனையாக அமைந்தது.இந்திய வீரர் அனுராக் சிங், 18.91 மீட்டர் தூரம் எறிய ,வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா ராஜராஜன் தமிழகம் 11.77 வினாடி நேரத்தில் ஓடி வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது தெற்காசிய ஜீனியர் தடகளத்தில் புதிய சாதனை ஆனது. இந்தியாவின கதீக் ஷா 11.92 வெள்ளி வெண்றார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் மிருத்யம் ஜெயராம் 10.56 வினாடி வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பூஜா 1.80 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
0
Leave a Reply