இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் ஹர்மன்பிரீத், சவிதாவுக்கு விருது.
இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. 1975ல் உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மலேசியாவில் நடந்த உலக கோப்பை பைனலில் (1975, மார்ச் 15) பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, மேஜர் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. நேற்று டில்லியில் எச்.ஐ., தலைவர் திலிப் டிர்கே தலைமையில் ஏழாவது ஆண்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, எச்.ஐ., அமைப்பின் பொதுச்செயலர் போலா நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஹாக்கி இந்தியா சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள்.
சிறந்த வீரர் ஹர்மன்பிரீத் சிங் -ரூ.25 லட்சம்
சிறந்த வீராங்கனை சவிதா புனியா-ரூ.25 லட்சம்
கோல்கீப்பர் சவிதா புனியா- ரூ.5 லட்சம்
தற்காப்பு வீரர் அமித் ரோஹிதாஸ் -ரூ.5 லட்சம்
'மிட்பீல்டர்' ஹர்திக் சிங்- ரூ.5 லட்சம்
முன்கள வீரர் அபிஷேக்- ரூ.5 லட்சம்
இளம் வீரர் அராய்ஜீத் சிங்- ரூ.10 லட்சம்
இளம் வீராங்கனை தீபிகா குமாரி-ரூ.10 லட்சம்.
0
Leave a Reply