பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல காத்தருக்கும் இந்திய ஹாக்கி அணி
இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். பிரிட்டன் வீரர்கள் கோல் போஸ்ட் நோக்கி அடித்த 21 ஷாட் 10 பெனால்டி கார்னர். 2 பெனால்டி ஷீட் அவுட் வாய்ப்புகளை தடுத்தார். காலிறுதியில் வென்றதால். இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ரோஹிதாஸ் ரெட் கார்டு சர்ச்சை பற்றி சர்வதே ஹாக்கி கூட்டமைப்பின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இவர் இல்லாத நிலையில் 10 பேருடன் 43 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க வேண்டியிருந்தது. காலிறுதி. இந்திய வீரர்கள் பெனால்டி ஷீட் அவுட்டில் கோல் அடித்தனர்.
நேற்று நடந்த பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதியில், உலக 'ரேங்கிங்' பட்டியலில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, பிரிட்டனை (உலகின் நம்பர்-2) எதிர்கொண்டது. 17வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ், 'ரெட்' கார்டு' பெற்று வெளியேற சிக்கல் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்ட நமது அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (22வது நிமிடம்) 'பெனால்டி கார்னர்' மூலம் கோல் அடித்து கைகொடுத்தார். இத்தொடரில் இவரது 7வது கோல். இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு லீ மார்டன் (27) ‘பீல்டு' கோல் அடித்து பதிலடி .தர, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. ரோஹிதாஸ் இல்லாததால், 10 வீரர்களுடன் விளையாடிய இந்திய அணி எஞ்சிய 43 நிமிடங்கள் கவனமாக ஆடியது. தற்காப்பு ஆட்டத்தில் இறங்கி, பிரிட்டன் வீரர்கள் கூடுதலாக கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டது. ஆட்ட நேர முடிவில் ஸ்கோர் 1-1 என சமநிலையை எட்டியது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ண யிக்க போட்டி, 'பெனால்டி ஷூட்' அவுட் முறைக்கு சென்றது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத், சுக்ஜீத் சிங், லலித் உபாத்யாய், ராஜ்குமார் பால் என 4 பேரும் கோல் அடித்தனர். பிரிட்டன் சார்பில் ஜேம்ஸ் அல்பிரே, ஜாக் வாலஸ் கோல் அடித்தனர். கானர் வில்லியம்சன், பிலிப் ரோப்பரின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்திய அணி 'பெனால்டி ஷூட் அவுட்' முறை யில் 4-2 என வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
ஹாக்கி அரையிறுதிக்கு தகுதி கடந்த டோக்கியோ ஒலிம்பிக் 2021 காலிறுதியில் இந்திய அணி பிரிட்டனை 3-1 என வீழ்த்தியது. தற்போது மீண்டும் பிரிட்டனை காலிறுதியில் வீழ்த்தியுள்ளது. கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா இம்முறை தங்கம் வெல்ல காத்தருக்கிறது.
0
Leave a Reply