25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


சோதனைகளை வென்று சாதனை படைக்கும் ஜோதி யாராஜி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சோதனைகளை வென்று சாதனை படைக்கும் ஜோதி யாராஜி.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜோதி யாராஜி, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து இந்திய தடகளத்தின் முன்னணி வீராங்கனையாக உயர்ந்துள்ளார். தந்தை தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், தாய் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றிய நிலையில், கடின உழைப்பால் தடகளத்தில் தனக்கென இடம்பிடித்தார்.

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2023 உலக பல்கலைக்கழக போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி, 12.78 வினாடிகளில் தேசிய சாதனையும் படைத்தார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

2025-ல் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓராண்டு ஓய்வில் இருந்த ஜோதி, 2026 தேசிய சீனியர் தடகளப் போட்டியில் 12.99 வினாடிகளில் தங்கம் வென்று வலுவான மீள்பிரவேசம் செய்தார். இதன் மூலம் ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News