இந்திய சைகை மொழி மற்றும் சர்வதேச காது கேளாதோர், சைகை மொழி விழிப்புணர்வு கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (07.10.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம்-2024 முன்னிட்டு, இந்திய சைகை மொழி மற்றும் சர்வதேச காது கேளாதோர் சைகை மொழி விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.காது கேளாத மாற்றத்திறனாளிகள் பேருந்து நிலையம், அரசு அலுவலகம், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு வரும் பொழுது, அவர்களுடன் உரையாடுவதற்காக அனைவருக்கும் ஒரு அடிப்படையான ஒரு புரிதல் இருக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும், மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில், முறையான சாய்வு தள பாதை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ப்ரெய்லி எழுத்துக்களால் ஆன விளம்பர பலகைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளையும், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன.நாகரீகம் அடைந்த சமுதாயத்தில் எல்லோரையும் ஒருங்கிணைத்து யாரையும் தனித்துவமாக விட்டு விடாமல், அனைவரும் ஒன்றாக ஒரே சூழலில் வரும் பொழுது இந்த சைகை மொழி தேவைப்படுபவர்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்களுக்கான சம உரிமை இந்த சமுதாயத்தில் இருக்க வேண்டும்.
அதை உறுதிப்படுத்துவதற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. குறிப்பாக அரசு அலுவலர்கள் இந்த சைகை மொழிகளை தெரிந்து கொள்வதன் அவசியம் என்னவென்றால், அரசு அலுவலகங்களில் அணுக வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதில் அளிக்கவும், குறைந்தபட்சம் அவர்களுக்கான அடிப்படையான சைகை மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி என தெரிவித்தார்.இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில், காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கு சைகை மொழி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் பல்வேறு இந்திய சைகைகள் குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply