இந்தியாவின் லக்சயா சென், பிரனாய்ஜப்பான் பாட்மின்டன் மாஸ்டர்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்ஜப்பானில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கோகி வடனாபே மோதினர். மொத்தம் 39 நிமிடம் போட்டியில் லக்சயா சென் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் பிரனாய் மற்றொரு போட்டியில் 16-21, 21-13, 23-21 என மலேசியாவின் ஜூன் ஹாவோ லியோங்கை வீழ்த்தினார்.
இந்தியாவின் கிரண் ஜார்ஜ் மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் 20-22, 10-21 என, மலேசியாவின் ஜிங் ஹாங் கோக்கிடம் தோல்வியடைந்தார்.
0
Leave a Reply