இந்தியாவின் முக்கிய மின்சாரம்
மின்சார உற்பத்தி முறைகளில் ஒன்று அனல் மின்சாரம். இது வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்கிறது. பின் அதனால் நீராவிச்சுழலியை இயக்கி அதனுடன் இணைத்துள்ள ஜெனரேட்டரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் முக்கிய மூலப்பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இவை அதிகமாக கிடைக்கக் கூடிய இடங்களில் அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. இந்தியாவின் மின்சார உற்பத்தியில் 50% இம்முறையில் தான் கிடைக்கிறது.
0
Leave a Reply