25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான வைகை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு நிறைவேற்றப்பட உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தினை  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான வைகை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு நிறைவேற்றப்பட உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தினை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட மல்லாங்கிணறு கலைஞர் திடலில் இன்று (23.02.2025) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு  வைகை ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.75.85 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.கிரண் குரலா,I A S., அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்திரு.கே.என்.நேருஅவர்கள்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு ஏற்கனவே உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் உள்ளூர் நீராதாரத்தின் வாயிலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 1.75 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு             1.00 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களால் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் நீங்கலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 2.38 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு 1.84 மில்லியன் லிட்டர் என கணக்கிட்டு அப்பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 29.10.2024 நாளிட்ட அரசு அரசாணை வாயிலாக ரூ.75.85 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தேவைப்படும் குடிநீரினை வைகை ஆற்றில் 11 நீர் உறுஞ்சு கிணறுகளிலிருந்து 3.96 கிலோ மீட்டர் நீளம், 100MM விட்டமுள்ள இரும்பு குழாய்கள் (DI) வழியாக 9.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்பு 2.38 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள 1.80 இலட்சம் லிட்டர் மேல் சமநிலை நீர்தேக்கத் தொட்டிக்கு (Balancing Reservoir) உந்தப்பட்டு அங்கிருந்து 58.61 கிலோ மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய் (DI pipe) மற்றும் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் (HDPE) தன்னோட்ட குழாய்கள் (Gravity Main) மூலம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு முறையே 80 ஆயிரம் மற்றும் 1.00 இலட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு அனுப்பப்படவுள்ளது.அங்கிருந்து குடிநீர் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் குழாய் 13.79 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் 13.98 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் உந்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படள்ளது.இத்திட்டம் நிறைவுறும் போது இவ்விரு பேரூராட்சிகளிலும் உள்ள 36,200 மக்கள் பயன்பெறுவார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News