லக்சயா ஆசிய ஜூனியர் பாட்மின்டனில் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றார்.
ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட் மின்டன் சாம்பியன்ஷிப்தொடர் சீனாவின் செங்டு நகரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது சுற்றில்இந்தியாவின் லக்சயா, சீனதைபேயின் குவான்யிலின் மோதினர். இதில் லக்சயா 21-17, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் திக்ஷா மற்றொரு 2வது போட்டியில் 17- 21, 21-16, 21-11 சீனாவின் யாருலுவோவை வீழ்த்தினார்.
இந்தியாவின் ஜாக் ஷேர் சிங் 21-14, 21-17 என சீனாவின் பெங் யூ ஜாங்கை, ஆண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது வீழ்த்தினார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் நிஷ்சல் சந்த், ஹர்திக் திவ்யான்ஷ் தோல்வி யடைந்தனர்.
0
Leave a Reply