கொசு விரட்டியாக மாறும் எலுமிச்சை தோல்
நாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி விட்டு அதன் தோலை கீழே வீசி விடுவது வழக்கம். ஆனால் நாம் கீழே வீணாக்கக்கூடிய அந்தத் தோலை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கு பல்வேறு ஹேக்குகள் உள்ளன. எலுமிச்சை அவற்றில் உள்ள அமிலத்தன்மை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக அற்புதமான சுத்தப்படுத்தியாக செயல்படுகின்றன. எலுமிச்சை சாற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை காரணமாக அது கிரீஸ் மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு கறைகளை அகற்றுவதற்கு உதவுகிறது. மேலும் எலுமிச்சை பழத்தில் காணப்படும் சிட்ரிக் அமிலம் இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆக செயல்பட்டு, காய்கறி நறுக்கக்கூடிய போர்டுகள் அல்லது கவுண்டர் டாப் போன்ற மேற்பரப்புகளை பளபளக்க செய்து, அவற்றில் உள்ள கறைகளை நீக்குகிறது..
எலுமிச்சை தோலை ஒரு கிரேட்டர் பயன்படுத்தி சீவி அதனை பல்வேறு உணவுகள், இனிப்பு வகைகள், சாலட் மற்றும் பானங்களில் சேர்ப்பது அதன் சுவையை அதிகப்படுத்துவதற்கு உதவும். எலுமிச்சை தோலை பேக்கிங் சோடா அல்லது வினிகர் போன்ற இயற்கை சுத்தப்படுத்தும் ஏஜெண்டுகளுடன் கலந்து பயன்படுத்தும் பொழுது அது மேற்பரப்புகளில் உள்ள கிருமிகளை அகற்றுவதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் மேற்பரப்புகள் வாசனையாக இருப்பதற்கும் எலுமிச்சை உதவுகிறது.
பிழிந்த எலுமிச்சை தோலை குடுவை போல மாற்றி அதில் கிராம்பு, எண்ணெய் மற்றும் சிறிதளவு கற்பூரம் போன்றவற்றை சேர்த்து திரி வைத்து விளக்கு ஏற்றி வைக்கும் பொழுது, இது கொசு விரட்டியாக செயல்படுகிறது. இதிலிருந்து வரக்கூடிய வாசனை பூச்சிகளை அகற்றுவதற்கும் உதவுகிறது. மேலும் இது இயற்கை ரூம் ஃபிரஷ்னராகவும் செயல்படுகிறது. கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்டுவதற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளையும் பெஸ்டிசைடுகளையும் நாம் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அவை கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்டுவதோடு மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. எனவே இது போன்ற இயற்கை ஹேக்குகளை பின்பற்றுவது நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.
எலுமிச்சை தோலை பேக்கிங் சோடா மற்றும் உப்புடன் கலக்கும் பொழுது அது ஒரு இயற்கை சுத்தப்படுத்தும் பேஸ்டாக மாறுகிறது. சமையலறை மேற்பரப்புகள் சிங்குகள், காய்கறி நறுக்கும் போர்டுகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கும் அவற்றை ஃபிரஷ்ஷாக வைப்பதற்கும் இது உதவுகிறது. எனவே இனி எலுமிச்சை தோலை கீழே எறிந்து விடாமல் அதனை மீண்டும் பயன்படுத்துவ து , பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இயற்கையான முறையில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் செயல்படுவதற்கு ஏற்றது.
0
Leave a Reply