மனோரஞ்சிதக் குழம்பு
தேவையான பொருட்கள் - வடை செய்வதற்கு உளுந்தம் பருப்பு 100 மில்லி லிட்டர், பச்சைமிளகாய் 2, கொத்த மல்லி விதை 1 தேக்கரண்டி, பட்டை சோம்பு சிறியது. தேவையான உப்பு, சுடுவதற்கு எண்ணெய்.
தேவையான பொருட்கள் - குழம்பு செய்வதற்கு உருளைக்கிழங்கு 2, வெங்காயம் 5, தேஙகாய் அரை மூடி, வற்றல் 5, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி, உளுந்தம்பருப்பு அரை தேக்கரண்டி, தாளிப்பதற்க எண்ணெய்.
செய்முறைபருப்பு - அரை மணிநேரம் நனைய வைத்து வடை செய்வதற்கு தேவையான சாமான்களைச் சேர்து வடைக்கு மாதிரி பொங்க ஆட்டி உப்பைக் கடைசியில் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்வும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நெல்லிக்காய் அளவு சிறு உருண்டைகளோ உருட்டிப் போட்டு சுட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கை தகடாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், வற்றல், சீரகம், அரைத்து வைக்கவும். தேங்காயைப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 கரண்டி, எண்ணெய் ஊற்றிக் கடலைப்பருப்பு ப்பருப்பு உளுந்தம்பருப்பு, கடுகு போட்டுச் சிவந்ததும், வெங்காயம் உருளைக்கிழங்கு கருவேப்பிலை போட்டு வதக்கவும். நன்றாகக் கொதிக்க விடவும். பாதி வதங்கியபின் தேங்காய்ப்பாலில் அரைத்த விழுதைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். கிழங்கு வெந்ததும் தயார் செய்து வைத்திருக்கும்
தேவையான வடைகளைப் போட்டு இறக்கி மல்லியிலை தூவி வைக்கவும். குறிப்பு வடைகளைப் போடும்போது குழம்பு கெட்டியாக இருக்கக் கூடாது. வடைகளைப் போட்டதும் குழம்பை குடித்து குழம்பு கெட்டியாகிவிடும், ஆகையால் அதற்க ஏற்றார்போல்
குழம்பு தயார் செய்து வடையும், குழம்புமாக பரிமாறவும்.
0
Leave a Reply