சுதந்திர இந்தியாவுக்குப் பின், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் மனு பாகர்.
.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகர் ,சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.பாரிசில் இருந்து 273 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் துப்பாக்கி சூடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர் ,சரப்ஜோத் சிங் இடம் பெற்ற அணி களமிறங்கியது.
பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை பெண்களுக்கான தனிநபர் முதல் சுற்றில் ரவுண்டு 64 இந்தியாவின் பஜன் கவர் இந்தோனேஷியாவின் சைபா நுராபிபா கமால் மோதினர். இதில் பஜன் கவர் 7-3 (27-27, 27-29, 29-27, 27-25, 28-25) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் ரவுண்டு 32 பஜன் கவர் போலந்தின் வயோலெட்டா மைசோர் மோதினர். இதில் மீண்டும் அசத்திய பஜன் கவுர் 6-0 (28-23, 29-26, 28-22) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் (ரவுண்டு16) நுழைந்தார்.
.முதல் நாள் நடந்த தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட மனு பாகர், சரப்ஜோத் ஜோடி 580 புள்ளி எடுத்து 3வது இடம் பிடித்தது. 1 புள்ளி வித்தியாசத்தில் 2வது இடத்தை இழந்து, தங்கப்பதக்கத்துக்கு போட்டியிடும் வாய்ப்பை நழுவ விட்டது. நேற்று நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மனு பாகர், சரப்ஜோத் ஜோடி 4வது இடம் பெற்ற தென் கொரியாவின் ஒயேஜின், வான்ஹோ ஜோடியை எதிர்கொண்டது.ஒவ்வொரு சுற்றுக்கும் 2 புள்ளி தரப்பட்டன. 16 புள்ளி எடுத்தால் பதக்கம் என்ற நிலையில், முதல் சுற்றில் தென் கொரியா 2-0 என முந்தியது. அடுத்து சிறப்பாக செயல்பட்ட மனுபாகர்-சரப்ஜோத் ஜோடி, தொடர்ந்து 4 சுற்றில் அசத்த, 8-2 என முந்தியது. 10 சுற்று முடிவில் மன பாகர் சரப்ஜோத் ஜோடி 14-6 என வெற்றியை நெருங்கியது.
இந்நிலையில் தென் கொரிய ஜோடி அடுத்தடுத்து இருசுற்றை வசப்படுத்த 10-14 என இந்தியாவை நெருங்கியது. பின் சுதாரித்துக் கொண்ட மனு பாகர்-சரப்ஜோத் ஜோடி 13- வது சுற்றை கைப்பற்றியது. முடிவில் 16-10 என வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் தட்டிச் சென்றது. ஒலிம்பிக் துப்பாக்கிசூடுதலில் அணிகளுக்கான பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் .ஏற்கனவே தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாகருக்கு, இது இரண்டாவது பதக்கமாக அமைந்தது. இதையடுத்து சுதந்திர இந்தியாவுக்குப் பின், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் .
0
Leave a Reply