மாருதி சுஸுகி நிறுவனம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,99,364 கார்களை விற்பனை செய்து சாதனை
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,99,364 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக வேறு எந்தவொரு மாதத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. 2024ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 23,921 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுதவிர டொயோட்டா நிறுவனத்திற்கு 5,229 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆல்டோ, ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ, வேகன்-ஆர், ஸ்விஃப்ட் ஆகிய ஹேட்ச்பேக் ரக கார்களை விற்பனை செய்து வருகிறது
இதுதவிர டிசையர் செடான் ரக காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. மேலும் எர்டிகா எம்பிவி ரக காரையும், பிரெஸ்ஸா எஸ்யூவி ரக காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் ஈகோ வேனையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனம் அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யும் கார்கள் ஆகும். இதுதவிர நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக இன்விக்டோ, க்ராண்ட் விட்டாரா, ஜிம்னி, ஃப்ரான்க்ஸ், எக்ஸ்எல்6, சியாஸ், பலேனோ, இக்னிஸ் ஆகிய கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்பதை மாருதி சுஸுகி மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளது. இதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் சரியான விலையில் அதிக மைலேஜ் தரக்கூடிய மற்றும் நிறைய வசதிகள் நிரம்பிய கார்களை விற்பனை செய்து வருவதுதான் காரணம். கூடவே இந்தியா முழுக்க சர்வீஸ் சென்டர்கள் இருப்பதும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
0
Leave a Reply