முருங்கை கீரை மற்றும் கருப்பு உளுந்து கஞ்சி.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - ¼ கப்,
முருங்கைக்கீரை - 1 கப்,
பூண்டு - 5 பற்கள்,
சீரகம் மற்றும் மிளகு - தலா 1 தேக்கரண்டி,
கருப்பட்டி (அல்லது வெல்லம்) - தேவையான அளவு.
செய்முறை:
கருப்பு உளுந்தை நன்றாக வறுத்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரைத்த உளுந்து, பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக
வேக வைக்கவும்.
உளுந்து வெந்ததும், சுத்தம் செய்த முருங்கைக்கீரையைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் வதங்க
விடவும்.
இறுதியாகக் கரைத்த கருப்பட்டிப் பாகு அல்லது வெல்லம் சேர்த்து, கஞ்சி பதம் வந்ததும்
இறக்கவும்.
முருங்கை கீரை மற்றும் கருப்பு உளுந்து கஞ்சி தயார். இது எலும்புகளுக்கு பலம் சேர்க்கும்மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பாரம்பரிய உணவாகும்.
இந்த ஆரோக்கியமான கஞ்சியை வாரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் உடலுக்குத்தேவையான இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் முழுமையாகக் கிடைக்கும்.
0
Leave a Reply