எம்.எஸ். சுப்புலட்சுமி படத்திற்கு அனிருத் இசை.
பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. அவரது கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளான இன்று, இப்படத்தின் பணிகளை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ராப் மற்றும் வெஸ்டர்ன் இசையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ள அனிருத், கர்நாடக இசையை எந்த அளவுக்கு வழங்கப் போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
Leave a Reply