தாளிக்கும் பொழுது கடுகு சிதறாமல் இருக்க....
ரொட்டி சப்பாத்தி இவற்றுடன்தேனை சேர்த்து சாப்பிட்டால் சக்தி அதிகரிக்கும், மிகவும் பழுத்து நொந்து போன பழங்களையோ அல்லது பழுக்காத பழங்களையோ சாப்பிட்டால் வயிறு வலிக்கும்,
இஞ்சியை மிக்சியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு போட்டுக் கொதிக்க வைத்து அதில் இஞ்சி சாற்றைக் கலந்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி, ஊறுகாய் போல் ருசியாக இருப்பதோடு ஜீரண சத்தியையும் அதிகரிக்கும்,
அரிவாள்மனை, தேங்காய்த்துருவி, காய்கறிகளை நறுக்கப் பயன்படுத்தும் கத்தி போன்றவைகளிலுள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு துண்டு வெங்காயத்தைக் கொண்டு தேய்த்தால், துரு போய் விடும்.
சமையலில் தாளிக்க கடுகு சேர்க்கும் பொழுது கடுகு சிதறாமல் இருக்க., கடுகு போட்ட பின் கொஞ்சம் ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது. மஞ்சள் தூளின் பச்சை வாசமும் எண்ணெயில் போய்விடும்.
0
Leave a Reply