ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஹெல்த் ட்ரிங்ஸ் இல்லை. பதிலாக ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என அறிவித்தது ஹிந்துஸ்தான் யுனிலீவர்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏப்ரல் 2ஆம் தேதி அன்று பால் மற்றும் தானியங்களை கொண்ட பானங்களுக்கு 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' (Health Drinks) என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பெயரில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் அதன் ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற பிராண்டுகளில் இருந்து 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' (Health Drinks) என்ற வார்த்தையை நீக்கியுள்ளது.ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளைக் கொண்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL), அதன் பானங்களின் பெயரை 'Health Drinks' என்பதில் இருந்து ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் (Functional Nutritional Drinks) எனப் பெயரிட்டுள்ளது.
ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என்பது புரதம் மற்றும் ஊட்டச்சத்துகுறைபாடுகளைபூர்த்திசெய்யஉதவும்பானங்களாகும். இவை தாவரங்கள், விலங்குகள் மற்றும் கடலில் உள்ள நுண்ணுயிரிகளின் கூறுகளைக்கொண்டிருக்கும். இந்தியாவில் விற்கப்படும் சில பானங்கள் 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' என்ற பெயரில் விற்கப்பட்டு வருகிறது. இது உண்மையாகவே ஆரோக்கியமானது தானா? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) ஒரு விசாரணையை அனுப்பியது. அதன் விளைவாக இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி பால், தானியம் மற்றும் மால்ட் பானங்களை குறிப்பிடுவதற்கு 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' 'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஹார்லிக்ஸ் பானத்தில் இருந்து ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நீக்கியுள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைமை நிதி அதிகாரியான ரித்தேஷ் ஹார்லிக்ஸ் போன்ற பானங்களின், லேபிள் மாற்றத்தைப் பற்றி அறிவித்தார். ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்பதற்கு திவாரி, ஏப்ரல் 24ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பதிலாக ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என பெயரிட்டு இருப்பது, இந்த வகை பானங்களின் பயன்பாட்டை துல்லியமாகவும் வெளிப்படையான விளக்கத்தை வழங்கும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மத்திய வணிகர் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அனைத்து இகாமர்ஸ் தளங்களிலும் விற்கப்படும் பானங்களில் குறிப்பிட்டுள்ள 'ஹெல்த் ட்ரிங்க்ஸ்' என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவிற்கு பிறகு இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் போர்ன்வீட்டா சமீபத்தில் அதன் லேபிளை 'ஹெல்த் ட்ரிங்க்' என்ற பிரிவிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்திய உணவு சட்டங்களின் கீழ் ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. இது போன்ற தவறான சொற்களை லேபிள்களில் பயன்படுத்துவது, இந்த பானங்களின் நுகர்வோரை தவறாக வழிநடத்தக் கூடும் என்பதால் இத்தகைய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
0
Leave a Reply