25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னிகள், பேரிளம் பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னிகள், பேரிளம் பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழ நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரம், நடமாடும் சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக் கடைகள் போன்ற சுயதொழில்கள் மூலமாக நிலையான வருமானம் பெற, அவர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் வண்ணம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50,000/- வீதம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி, சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள கீழ்கண்ட தகுதிகளை உடைய பயனாளிகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இ-சேவை மையம் அல்லது கைபேசி வாயிலகவோ tnwidowwelfareboard.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் முதலில் கீழ்கண்ட அசல் சான்றிதழ்களை இணைத்து பதிவு செய்ய வேண்டும். பின்பு அசல் கருத்துரு நகலினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில்  சமர்ப்பிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

1. tnwidowwelfareboard.tn.gov.in  என்ற இணைய முகப்பினை வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்
2. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
3. 25 - 45 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்
4. குடும்ப வருமானம் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்
5. குடும்ப அட்டை
6. ஆதார் நகல்
7. முகவரி சான்று
8. கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று (Self Declaration Certificate).

மேற்கண்ட இணையத் தளத்தில் பயனாளிகள் விண்ணப்பிக்கும் பொழுது, ஏதேனும் சந்தேகம் இருப்பின், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர். 04562- 252 701 / 86808-88634 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News