பெண்களின் சிக்கனத்தில் காப்பாற்றப்படும் நமது அரசாங்கம்
சேமிப்பு நாட்டைக் காக்கும் சிக்கனம் வீட்டைக் காக்கும் என்பது சரிதான். ஆனால் சேமிப்பு நாட்டைக் காக்கும் என்கிறீர்களே அது எப்படி? . பலருக்கு இன்றைய அரசாங்க நிதி நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளதா ? என்றால் பெரிய கேள்விக் குறிதான். நமது அரசாங்கத்தின் நிதிநிலை செலவுக் கணக்கில் துண்டு விழுந்திருக்கிறது என்றால் வருவாய் பற்றாக் குறை அல்லது வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டிருக்கிறது.
நம் அரசின் எல்லா செலவினங்களையும் விட பெரிய செலவு வட்டி கட்டுவது தான் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதே நிலை மறுபடியும் ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் அரசுக்கு வட்டி பாரமும் கூடுகிறது. இப்படி கடன் வாங்குவதால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இந்திய மக்களாகிய நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
அரசு கடன் வாங்கினால் நமக்கு என்ன ? என்று இருக்க முடியுமா ? கட்டுக் கடங்காமல் வாங்கிய கடன்களினால் அரசு இன்ஷிரன்ஸ் கம்பெனிகள், வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கும் பொழுது, தொழில் நடத்துபவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கிடைக்க வேண்டிய நிதி குறைகிறது. இதனால் தொழிலும், விவசாயமும் பாதிக்கப்படும்.
பல ஆண்டுகளாக வட்டி விகிதத்தை குறைக்கவும் முடியாமல், வட்டி விகிதம் ஏறுவதைத் தடுக்க முடியாமல் தத்தளிக்கிறது. சரி, அரசாங்கம் எங்கே கடன் வாங்குகிறது என்று தோன்றுகின்றதல்லவா ? வங்கிகளில் உள்ள டெபாசிட் பணம் (மக்கள் பணம்) அரசு பெறும் கடனாக மாறுகிறது. எவ்வளவு தான் விலைவாசி ஏறினாலும், மக்கள் குருவி போல சேமித்து வங்கிகளிலும், கையிலும் பணம் வைத்திருப்பதுதான்.
இன்று நம் அரசாங்கத்தின் நிதி நிலைமை மக்களின், முக்கியமாக பெண்களின் சிக்கனத்தில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சேமிப்பால் அரசாங்கம் காப்பாற்றப்படுகிறது. என்ன தான் கிரெடிட் கார்ட் கலாச்சாரம் இருந்தாலும், நம் மக்கள் இதை உபயோகிப்பதற்கு ரெம்பவே யோசிக்கிறார்கள். ஆனால் 30 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்கா நாட்டில், 120 கோடி கிரெடிட் கார்டுகள் நடமாடி மக்கள் அனைவரையும் கடனாளியாக்கி விட்டது. குடும்ப சேமிப்பே இல்லாத இந் நாட்டில் கடன் மட்டும் தான் என்ற நிலை உருவாகி அமெரிக்க அரசாங்கம் அடாவடி செலவு செய்வதற்கு கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முழுமையான காரணம் கலாச்சார சீரழிவே ஆகும். பெண்கள் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்யாமலும் வாழலாம். சர்வ சாதாரணமாக விவாகரத்து செய்வது, போன்ற சீரழிவுகளினால் சேமிப்பு என்பதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக, அமெரிக்க தேசம் டாலர் மதிப்பினால் தப்பித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பொருளாதார வளர்ச்சி அடைந்த அமெரிக்க தேசம், மற்ற தேசங்களுக்கு கடன் வழங்கி ராஜாவாக இருந்த தேசம், சேமிப்பு இல்லாததால் கடன்பட்டு புதைந்து கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பிற்கு கடன் கொடுக்கத் தயங்குவதில்லை. ஆனால் நம் தேசத்தின் ரூபாய் மதிப்பிற்கு கடன் கொடுக்க உலக நாடுகள் முன் வருவதில்லை. நம் நாட்டு மக்கள் சேமிக்கவில்லை என்றால், அரசாங்க செலவிற்காக ,பல லட்சக் கணக்கான ரூபாய்களை, அச்சடிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் நாடு திவாலாகி விடும்.
ஆனால் நம் நாட்டில் ஆங்காங்கு சில கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும், குடும்பங்களில் கலாச்சாரம் 90 % சிறப்பாகவே இருக்கிறது. நம் நாட்டில் பந்தாவைக் காண்பிப்பதற்கு, ஒரு சிலர் இருந்து செலவுகளைச் செய்தாலும். மற்றவர்கள் எல்லாம் வருமானம். கூடக் கூட, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதால், இன்று நமது அரசாங்கம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இப்பொழுது நமக்கு லேசாக மனதில் படுகிறதல்லவா ? எப்படி அரசாங்கம் இலவசங்களை வாரி இரைத்துக் கொண்டிருக்கிறது என்று எல்லாம் நம் பணமே. ஆனால் பெயர் பெறுவதோ அப்போதைய அரசியல் வாதிகள் தான்.
1980 ஆம் ஆண்டு முதல் அரசின் வரவுக்கு மிஞ்சிய செலவுகளுக்கு தங்களுடைய சேமிப்பின் மூலமாக நம் தேசக் குடும்பங்களே, கடன் கொடுத்து காப்பாற்றி வருகிறது. கலாச்சார அடிப்படைகளில் உள்ள குடும்பங்கள் தான் நம் அரசையும், நம் தேசத்தையும் காப்பாற்றுகின்றனர். நம் தேசத்தின் குடும்ப அமைப்பை தகர்க்கவும். பெண்களின் தரத்தையும் கட்டுப்பாடையும் குலைக்க ஏராளமான முயற்சிகள் நடந்தும், நம் குடும்ப பெண்கள் எதற்கும் பலியாகாமல் இருப்பதால் தான், இன்று நாட்டின் பொருளாதாரம் பிழைத்திருக்கிறது. செழித்தும் வருகிறது. அப்போ சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும் சரிதானே. இதைப் படித்த பின் கட்டாயமாக சேமிப்பு இன்றும் கூடும் என நம்புகிறேன்.
0
Leave a Reply