தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக 20 டோல்கேட் அமைக்க திட்டம்
தமிழ்நாட்டில் அதிகப்படியான சுங்கச்சாவடிகள் இருப்பதாக நீண்ட காலமாகவே மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இதனால் அதிகமாக இருக்கும் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 2 அல்லது3 ஆண்டுகளில் மேலும் புதிதாக20 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை எங்கே வரும் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல கட்சிகள் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறது. சுங்கச்சாவடிகள்:இந்த லோக்சபா தேர்தலில் கூட ஆளும் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து வருகின்றன. ஆனால்,இப்போது அதற்கு நேர்மாறான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில், 12 சுங்கச்சாவடிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் திறக்கப்பட்டன,தமிழ்நாட்டில் கடைசியாகத் திறக்கப்பட்ட சுங்கச்சாவடி என்றால் அது அவினாசி திருப்பூர் அவினாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை 381இல் உள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி. இது கடந்த மார்ச் 1ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள்:அதற்கு முன்பு மதுரை செட்டிகுளம் நத்தம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை785இல் உள்ள பரளி புதூர் சுங்கச்சாவடி கடந்த பிப்ரவரி8ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.அங்கே கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனம் ஒரு முறை செல்ல ரூ.180 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.மாநிலத்தில் வேறு எந்த சுங்கச்சாவடியிலும் இந்தளவுக்கு அதிக கட்டணம் இல்லை.உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ச்6ஆம் தேதி இந்த சுங்கச்சாவடியை ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சூறையாடினர்.
இப்படிப் பல இடங்களில் ஏற்கனவே சுங்கச்சாவடிகளுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும் போதிலும் புதிய சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் 6 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவுச்சாலை, விக்கிரவாண்டி- சோழபுரம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை36இல் தலா மூன்று சுங்கச்சாவடிகள் எனப் புதிதாக20 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ளது.அடுத்த2 அல்லது3 ஆண்டுகளில் அந்த சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.2008இல் கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் விதிகள் படியே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,"இதில் நீங்கள் நெடுஞ்சாலைகள் ஆணையத்தை மட்டும் குறை சொல்லக் கூடாது. நகரைச் சுற்றியுள்ள ஐந்து சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். ஆனால்,மாநில அரசு வண்டலூரை மீஞ்சூருடன் இணைக்கும் வெளிவட்டச் சாலையில் நான்கு புதிய சுங்கச்சாவடிகளைத் திறந்தது.133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு பணி முடிந்ததும் இவை செயல்படத் தொடங்கும்" என்றார்.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில்,"லாரி ஓட்டுநர்களிடம் மாதம் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும் என நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு இதுவரை ஏற்கவில்லை.தேர்தல் காலங்களில் இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது.ஏனென்றால் நிதின் கட்கரி சாலை அமைக்கச் செலவான தொகையைத் திரும்பப் பெற்ற சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும்60 கிமீ சுற்றளவில் இரு சுங்கச்சாவடிகள் இருந்தால் அதையும் நீக்குவோம் என்றார்.ஆனால், இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. கட்காரி இப்போது ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணத்தை வசூலிப்போம் என்கிறார். இதனால் நெடுஞ்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இது அனைவருக்கும் பெரும் சுமையாக இருக்கும். குறிப்பாக லாரி ஓட்டுநர்களுக்கு இது கூடுதல் சுமையைத் தான் தரும்" என்று அவர் தெரிவித்தார்.
0
Leave a Reply