கௌதம் அதானி வாழ்க்கையை மாற்றிய ப்ரீத்தி அதானி
இந்திய பணக்காரர்கள் என்ற உடன் அம்பானி , அதானி குடும்பத்தினர் தான் கௌதம் அதானி தன்னுடைய தொழில் சாம்ராஜ்யம், சர்ச்சைகள் உள்ளிட்டவற்றுக்காக அடிக்கடி செய்திகளில் தென்பட கூடிய ஒரு பெயர்.பிரமிக்க வைக்கும். கௌதம் அதானியின் சொத்து மதிப்புற்கும், வளர்ச்சிக்கும் காரணமாக இருப்பவர் அவரது மனைவி ப்ரீத்தி அதானி.குஜராத் மாநிலத்தை சேர்ந்த ப்ரீத்தி அதானி ஒரு பல் மருத்துவர் என்பது பலருக்கும் தெரியாது. மருத்துவராக இருந்து தற்போது மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவியாக உயர்ந்திருக்கிறார் ப்ரீத்தி அதானியின் வருகைக்கு பிறகு தொழிலை தாண்டி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதானிக்கு பிறந்திருக்கிறது. ப்ரீத்தியின் முயற்சியால் அதானி குழுமத்தில் இருந்து அதானி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தற்போது ப்ரீத்தி தான் அதானி அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு அதானி அறக்கட்டளை நிறுவப்பட்டது முதல் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை இந்தியாவின் 19 மாநிலங்களில் 5853 கிராமங்களில் பல்வேறு தொண்டுகளை செய்து வருகிறது. அதானி அறக்கட்டளை மூலம் சுமார் 70 லட்சம் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வி, பொது சுகாதாரம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் இந்த அறக்கட்டளை கவனம் செலுத்தி வருகிறது.அதானி குழுமத்திற்கு கிடைக்கும் லாபத்தில் 3 % அதானி அறக்கட்டளைக்கு என ஒதுக்கப்படுகிறது. . ப்ரீத்தி அதானியை பொறுத்தவரை மக்களின் படிப்பறிவு விகிதத்தை முன்னேற்ற வேண்டும் என இலக்கு கொண்டவர். எனவே கல்வி சார்ந்த தொண்டுகளில் கவனம் செலுத்துகிறார்.கௌதம் அதானி பல்வேறு நேர்காணல்களில் தன்னுடைய தொழில் மற்றும் முன்னேற்றத்தில் மனைவி பிரீத்தி அதானியின் பங்கு மிக முக்கியமானது என பெருமிதமாக தெரிவித்துள்ளார். தற்போது ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு சுமார் 8,000 கோடியாக இருக்கிறது.கௌதம் அதானி - ப்ரீத்தி அதானி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் கரன், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். ஜீத், அதானி குழுமத்தின் நிதித்துறை துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
ப்ரீத்தி அதானி. அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியில் டெண்டல் சர்ஜனுக்கான பிடிஎஸ் படிப்பை முடித்த ப்ரீத்தி, மருத்துவராக சேவையாற்றி வந்தார்.1986ஆம் ஆண்டு கௌதம் அதானிக்கும் ப்ரீத்திக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது ப்ரீத்தி பல் மருத்துவர், கௌதம் அதானியோ மேல்நிலை பள்ளி படிப்பை மட்டுமே முடித்திருந்தார். கல்லூரிக்கு கூட செல்லாத தன்னை ப்ரீத்தி ஏற்பாரா என்ற தயக்கம் இருந்தது, ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார், இது தான் என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம் என கௌதம் அதானி பேட்டிகளில் கூறி இருக்கிறார்
0
Leave a Reply