லாபம் தரும் Post Office Saving Scheme
மாதம் ரூ.9250 வழங்கும் பிரதம மந்திரியின் மாத வருமான திட்டம் MonthlyIncomeSchemeபல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள்
மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் பாதுகாப்பானது மற்றும்
நம்பகமானது.
அந்தவகையில், MIS (எம்ஐஎஸ்) (Monthly Income Scheme) என்று சொல்லக்கூடிய மாதாந்திர வருமானத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். இதன் ஆண்டு வட்டி விகிதம் 7.4 % ஆகும்.
Deposit செய்யப்படும் முதலீடு தொகையின் மூலம் மாதம் தோறும் வட்டியை பெறலாம். இந்த டெபாசிட் தொகை முதிர்வடைந்ததும் உங்களுக்கு திருப்பி தரப்படும்.
ஆனால், அதற்கு முன்பே நீங்கள் டெபாசிட் தொகையை எடுக்க விரும்பினால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.
நீங்கள் முதலீடு செய்த தொகையை ஒரு வருடம் முதல்3 வருடஇடைபட்ட காலத்தில் திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 2 % பணம் அபராதமாக வசூலிக்கப்படும்.
3 வருட காலத்திற்கு பிறகு பணத்தை திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 1 % அபராதமாக வசூலிக்கப்படும்.
ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.5,500 கிடைக்கும். அதேபோல, கூட்டு கணக்கு மூலம் ரூ.15 லட்சம்
முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு மாதம்தோறும் ரூ.9,250 கிடைக்கும்.
0
Leave a Reply