முதுமை அடையாமல் நீண்ட ஆயுளை அளிக்கும் சக்தி கொண்ட புரசு மரப்பூ கஷாயம்
புரசு மரப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வாத சளி, மூல நோய்கள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.
புரசு இலையில் சாப்பாடு செய்தால் வயிற்றுக் கட்டிகள், ரத்தத்தில் உள்ள சூடு, பித்தம் குறையும்.
புரசு மரத்தின் இலைகள், பூக்கள், மேல் பட்டை, வேர்ப்பட்டை, காய்களை சம பாகமாக இடித்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எல்லா நோய்களும் குறையும்.
1 கிராம் புரசு விதையுடன் 5 கிராம் வெல்லம் கலந்து பேஸ்ட் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் வலி குறையும்.
எலுமிச்சம்பழச் சாறுடன் புரசு விதைகளை அரைத்து சிரங்கு, படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் நாளடைவில் நோய் குறையும்.
புரசு விதையை இளநீர், குங்குமப்பூ சேர்த்து அரைத்து மாத்திரை அளவு செய்து உலர்த்தி நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
புரசு மர விதைகளை உலர்த்தி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் நீங்கும்.
0
Leave a Reply