கோடைக் காலத்தில் உடலைக் குளிரச் செய்யும் ராகி கூழ்
வெயிலைத் தவிர்க்கவும், கோடைக் காலத்தில் உடலைக் குளிரச் செய்யவும் ராகி கூழ் உங்களுக்கு உதவும்கோடை காலம் வந்துவிட்டது. வெயிலின் உக்கிரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர யோசிக்கிறார்கள். மோசமான நிலையில் வெளியே சென்றவர்கள் வெயிலின் வெப்பத்தில் இருந்து விடுபட குளிர் பானங்கள், பழச்சாறுகள், தேங்காய் தண்ணீர் போன்றவற்றை நாடுகின்றனர்.பழச்சாறுகள் மற்றும் தேங்காய் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை தினமும் உட்கொள்ள முடியாது. அப்படியானால், வெயிலில் இருந்து தப்பிக்க ராகி கூழ் தீர்வு.
தேவையான பொருட்கள்
· ராகி மாவு - 4 டீஸ்பூன்
· சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
· மோர் - 1 கப்
· தண்ணீர் - 2 முதல் 3 கப்
· உப்பு - தேவையான அளவு
ராகி கூழ் செய்முறை
·முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் ராகி மாவை சேர்க்கவும். பிறகு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும்.
· இப்போது ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.
· தண்ணீர் சிறிது கொதித்ததும், ராகி மாவு கலவையை ஊற்றவும்.
· இப்போது தீயை குறைத்து, ராகி கூழை ஒரு கரண்டியால் கிளறவும்.
· இதையடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்க்கவும்.
· ராகி கூழ் சிறிது ஆறிய பிறகு அதனுடன் தயிர் அல்லது மோர் சேர்த்து கலந்து குடிப்பது மிகவும் நல்லது.
· இந்த கூழை மேலும் சுவையாக மாற்ற பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
ராகி கூழை காலையில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் அயோடின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இதனை குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இதனை கோடையில் குடிப்பதால் உடலில் உள்ள சூடு குறையும்.ராகி கூழில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதை குடித்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் என்பது ஐதீகம். ராகி கூழை தினமும் குடித்து வர இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ராகி கூழை முதல் நாள் இரவு தயாரித்து மறுநாள் மோர் அல்லது தயிர் கலந்து குடித்தால் மிகவும் ருசியாக இருக்கும் உடலுக்கும் நல்லது.
0
Leave a Reply