இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சமாதானக்கூட்ட நடவடிக்கைகள்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் மற்றும் நகரம், இராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பாதாள சாக்கடைத்திட்டம், தாமிரபரணி குடிநீர் திட்டம் மற்றும் இரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிப்பது தொடர்பாக இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பில் 28.03.2023 அன்று நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்தது தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்து சமாதானக்கூட்டம் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 26.03.2023 அன்று மாலை 05.00 மணியளவில் சிறப்பு அழைப்பாளர்களாக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் இராஜபாளையம் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.
1 மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்களின் விபரம்:
1. வருவாய் ஆய்வாளர், இராஜபாளையம்
2. கிராம நிர்வாக அலுவலர், இராஜபாளையம்
3.சார்பு ஆய்வாளர், தெற்கு காவல் நிலையம், இராஜபாளையம்
/I-நகராட்சி தரப்பினர் சார்பாக கலந்து கொண்டவர்கள்
Tதகராட்சி ஆணையாளர், இராஜபாளையம்
இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பாக கலந்து கொண்டவர்கள்
1.திரு.மாரியப்பன், (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) 9488717452.
2. திரு.என்.ஏ. ராமச்சந்திரராஜா (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்)
3. திரு.எம்.மணிகண்டன் (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) மற்றும் 15 நபர்கள்
மேற்படி கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது;
1.08.03.2023-ல் நகர்மன்ற தீர்மானம் எண்:94-ன்படி வரிவிதிப்பு குறைப்பிற்கான நடவடிக்கை அரசாணை வருகிற எப்ரல் மாதம் 20-ம் தேதிக்குள் பெற்றுத் தருவதாக நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
2. சொத்து வரி விகிதம் (Basic Kate) 19% இருந்து 16 ஆக குறைப்பதற்கான நடவடிக்கைகள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் சட்டமன்றத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
3. குடிநீர் இணைப்புக் கட்டணம் மற்றும் கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி, செலுத்தியவர்களின் தொகை அடுத்து வரும் நிதியாண்டிற்கான கட்டணத்தில் அல்லது வைப்பு தொகையில் ஈடு செய்யப்படும்.
4. மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் 28.03.2023 அன்று நடைபெற இருந்த முற்றுகை போரட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
0
Leave a Reply