வறுத்த பூண்டு
வறுத்த ஆறு பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இரைப்பையில் செரிமானமாகி உடலுக்கு சிறந்த உணவாக மாறும் இரண்டு அல்லது நான்கு மணி நேரத்தில் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கப்படும், ரத்த அழுத்தத்தை சீராக்கும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும் பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது அதிலும் காலை வேளையில் என்று சொல்வார்கள். ஆனால் தினுமும் அப்படி சாப்பிடகூடாது. அப்படி சாப்பிட்டாலும் அதன் தோலை நீக்கி சாப்பிடலாம். குறிப்பாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடும் போது கவனமாக இருக்கவேண்டும். தினமும் பச்சையாக சாப்பிடாமல் மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். வேகவைத்து வறுத்து சுட்டு சாப்பி டலாம்.ஆனால் வறுத்து சாப்பிடும் போது இன்னும் பலன்களும் கிடைக்கிறது.
இரவு நேரத்தில் ஒரு தம்ளர் பாலில் பூண்டின் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் கலந்து வேக வைத்து குடிக்கலாம். தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பூண்டு மாற அதை வறுத்து தயாரிக்க லாம்பூண்டின் தோலை உரித்து சுத்தம் செய்து வாணலியில் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுங்கள். தொடர்ந்து20 நிமிடங்கள் வரை வறுங்கள். முதலில் பூண்டிலிருந்து நாற்றமடிக்கும் மணம் வெளியேறும். அதை தொடர்ந்து பூண்டில் அலிசின் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.இதை அப்படியே சாப்பிடலாம். நாற்றமில்லாதது என்பதால் எளிதாக சாப்பிட முடியும். எனினும் சுவை விரும்பிகள் பூண்டை வறுக்கும் போது கால் டீஸ்பூன் வெண்ணெய், தேவையான அளவுக்கு மிளகுத்தூள் உப்பு சேர்த்து வறுக்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் வளரும் பருவத்தில் உடலில் அனைத்து சத்துகளையும் நிறைவாக கொண்டுவளர்வார்கள்.
தினமும்,5 பல் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் அதிசயத்தக்க வகையில் உடலின் ஆரோக்கியமும் வேகமாக அதிகரிக்கிறதுவைட்டமின் சி சத்து தான் உடலில் இரத்த நாளங்கள். தசைகள், எலும்புகளின் வலுவை உறுதி செய்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் உடலில் நன்மை செய்யும் நொதிகளை தூண்டுகிறது.உடலில் இரும்புசத்து, ஜிங்க் போன்றவை சிறப்பாக இயங்க பூண்டு உதவுகிறது என்பதை உணவு குறித்த வேதியியல் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது .வளரும் பிள்ளைகளுக்கு பூண்டில் சற்று கூடுதலாக வெண்ணெய் சேர்த்து கொடுங்கள். ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும்.
0
Leave a Reply