சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நுரையீரல் பாதித்தவர்கள் ,காய்கறி பீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்
.அன்றாடம் உண்னவேண்டியடாப்10 காய்கறிகளில்ஒன்றாகக்குறிப்பிடப்படும்காய்கறிபீன்ஸை தொடர்ந்து சாப்பிட விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். பச்சைபீன்ஸில்தேவையானஅளவுக்குவைட்டமின் C, A மற்றும் B6 ஆகியஅனைத்துசத்துக்களும்நிறைந்துஉள்ளன. இதில்ஃபோலிக்அமிலமும்காணப்படுகிறது. இதைத்தவிர, பச்சைபீன்ஸில்தேவையானஅளவுகால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், மாங்கனீஸ், பீட்டாகரோட்டின், புரதச்சத்து, பொட்டாசியம்மற்றும்காப்பர்சத்துக்கள்உள்ளன.
100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின்உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவு. ஒரு கப் சமைத்த பீன்ஸ்15 கிராம் புரதங்கள் கொண்டது. பீன்ஸ் நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்தது. இவை தசைஉருவாக்கம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான புரதங்களை வழங்குகிறது.இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றம் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. பீன்ஸில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
பெருகி வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால், சுமார்60 சதவீதம் பேர் அசுத்தமான காற்றை சுவாசித்து அதனால் நுரையீரல் பாதித்து நெஞ்சு சளி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தில் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க தினமும்50 கிராம் பச்சை பீன்ஸ் சாப்பிட்டு வர வேண்டும் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர் . தினமும் பச்சை பீன்ஸ் சாப்பிட90 சதவீதம் நுரையீரல் பிரச்னையை தீர்க்கலாம் என்கிறார்கள்.
பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தொப்பை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பீன்சை கறி, கூட்டு என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். பீன்ஸில் வைட்டமின் ஓ உள்ளது. இது புது செல்கள் உருவாவதில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கின்றது. ஆதலால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே பரவாமல் தடுக்குமாற்றலை பீன்ஸ் கொண்டுள்ளது.பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்குஇன்சுலின் எதிர்ப்பை கணிசமாக குறைக்கும்.பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. புரதச் சத்து நிறைந்துள்ளது. பீன்ஸ் டைப்2 இரத்த குளுக்கோஸ் அளவுகளை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள்
0
Leave a Reply