விதை பரிசோதனையே விளைச்சலுக்கு ஆதாரம்.
விதைப்பரிசோதனை என்பது புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிற ரக கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதே.
விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விதைப் பரிசோதனைநிலையங்கள் செயல் படுகின்றன.
விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் தங்களிடம் உள்ள விதைகளின் தரம் பற்றி அறிந்து கொள்ள ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்த வேண்டும். விதை மாதிரி பெற்ற 30 நாட்களுக்குள் விதையின் தரம் குறித்த அறிக்கையை பெறலாம்.
குறைந்த தரம் உள்ள விதைகளை நிராகரிக்க விதைப் பரிசோதனை முடிவுகள் உதவுகின்றன. நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை பயன்படுத்துவதன் மூலம் விதைச்செலவை குறைக்கலாம்.
புறத்துாய்மை பரிசோதனையில் பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் துாசு கண்டறியப்படுகிறது. ஈரப் பதப் பரிசோதனையின் மூலம் பூச்சி நோய் தாக்குதலின்றி விதைகளை சேமித்து அடுத்த கால விதைப்பு வரை விதைகளை பாதுகாக்கலாம்.
0
Leave a Reply