கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க
கோடை காலத்தில் கடுமையான சூரிய ஒளி தாக்கத்தால், உணவுகள் சீக்கிரமே கெட்டு போய்விடும். அதுமட்டுமின்றி காலை நன்கு சூடாக்கினாலும் கூட அது விரைவில் கெட்டுப் போய்விடும்.
கோடையில் பால் கெட்டுப் போகாமல் இருக்க, முதலில் பாலை நன்கு சூடாக்கிய பின் முழுமையாக ஆறவிடவும். அது ஆறியதும், கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்வதால் பால் கெட்டுப் போகாது.
கோடையில் பாலை சேமிக்க பிளாஸ்டிக் கேன்களை பயன்படுத்தலாம். இதற்கு பாலை சூடாக்கி, அதை ஆறவிட்டு பிறகு பிளாஸ்டிக் கேனில் சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்வதால் பால் கெட்டுப் போகாமல் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நன்றாக இருக்கும்.பால் கெட்டுபோகாமல் சேமிக்க எஃகு பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பாலை சேமிப்பதற்கு முன், கொள்கலன் நன்கு கழுவப்பட்டதா.. இல்லையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இதில் பாலை சேமித்து வைத்தால் பாலின் சுவை மாறாது.
உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லை என்றால், பாலை ஒரு நாளைக்கு நான்கு முறை சூடாக்க வேண்டும். மேலும் பால் கொதிக்கும் போது தீயை குறைக்கவும். பால் கொதித்த உடனேயே மூடி வைக்காதீர்கள். மேலும், பாத்திரத்தின் விளிம்பு வரை பால் நிரப்பாதீர்கள்..
பாக்கெட் பாலை கடையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்த உடனே பால் காய்ச்ச கூடாது. தண்ணீர் போடுங்கள். பிறகு இரும்பு பாத்திரத்தில் காய்ச்ச வேண்டும்.
0
Leave a Reply