விளையாட்டு போட்டிகள் 19th MARCH
கால்பந்து:
2027ல்சவுதி அரேபியாவில்ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று இம் மாதம் நடக்க உள்ளது. மொத்தம் 24அணிகள்,ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,போட்டிகள் நடக்கும், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலாஇரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.
உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி'பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. மார்ச் 25ல்தனது முதல் போட்டியில் 185 வதுஇடத்திலுள்ள வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.
தேசிய பாரா பவர்லிப்டிங்
22வது சீனியர், 17வது ஜூனியர் தேசிய பாரா பவர் லிப்டிங் சாம்பின்ஷிப் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் நடந்தது.தமிழகம், குஜராத், ஹரியானா உட்பட 28 நிலத்தின் 280க்கும் மற்பட்ட வீரர், ராங்கனைகள் பங்கேற்றனர்.
பெண்களுக்கான சீனியர் 67 கிலோ பிரிவில் தமிழகத்தின் கஸ்தூரி, தங்கம் - அகிலா வெண்கலம் வெ ன்றனர். சீனியர் 86கிலோ பிரிவில் அருண் மொழி தங்கம் கைப்பற் றினார். ஆண்கள் ஜூனியர் 88 கிலோ பிரிவில் மகேஷ்வரன், 72 கிலோ பிரிவில் மனோவா தங்கம் கைப்பற்றினர்.
ஹாக்கி
தேசிய ஹாக்கி லீக் போட்டி ராஞ்சியில் நடந்த பெண்கள் ஹரியானா அணி, மணிப்பூரை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஒடிசா அணி, பெங்காலை 1-0 என வென்றது.
0
Leave a Reply