விளையாட்டு போட்டிகள் .MARCH 22ND
தேசிய 'டி.இ.எப் டி20' கிரிக்கெட்டில் புதுச்சேரி அணி சாம்பியன் ஆனது,
சென்னை, ஐதராபாத்தில், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய 'டி-20' சாம் பியன்ஷிப் நடந்தது.நேற்று, சென்னையில்நடந்தபைனலில்லியோபார்ட்ஸ்புதுச்சேரி, புல்ஸ்விஜயவாடாஅணிகள்மோதின.புதுச்சேரி 20 ஓவரில் 187/9 ரன் எடுத்தது விஜயவாடா அணி 15 ஓவரில் 113 ரன்னுக்கு சுருண்டு 74 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாரா விளையாட்டில் அசத்தல், தமிழகத்தின் ரமேஷ் 'தங்கம்'
டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான "கேலோ இந்தியா பாரா' விளையாட்டு உவது சீசன் நடக் கிறது. ஆண்களுக்கான 800 மீ., (D53/D54) 'வீல்சேர்' ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தின் ரமேஷ் ஷண்முகம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சென்னையை சேர்ந்த ரமேஷ் ஷண்முகம், திருச்சி யில் உள்ள விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். எட்டாவது வயதில் நடந்த லாரி விபத்தில் தனது இடது காலை இழந்தார். துவக்கத்தில் கூடைப்பந்து விளையாடிய இவர், பின் 'வீல்சேர்' போட்டியில் பங்கேற்றார்.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின் டன் தொடர் காலிறுதியில் சங்கர்,
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின் டன் தொடர் ஆண்கள் சங்கர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் தரவரிசை யில் 64வது இடத்திலுள்ள இந்தியாவின் சங்கர் முத்துசாமி, உலகின் 'நம்பர்-2' வீரர், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனை சந்தித்தார்.முதல் செட் 17-17 என சமநிலையில் இருந்த போதும், கடைசியில் சங்கர் 19-21 என இழந் தார். 2வது செட்டில் எழுச்சி பெற்ற சங்கர் 18-9 என முந்தினார். பின் 21-12 என செட்டை கைப்பற்றினார். மூன்றாவது, கடைசி செட் துவக்கத்தில் 3-3 என சமனில் இருந் தது. அடுத்து துடிப்பாக செயல்பட்ட சங்கர் 21-5 என எளிதாக வசப் படுத்தினார்.முடிவில் சங்கர் 19-21, 21-12, 21-5 செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
துப்பாக்கி சுடுதல்: அசாம் அணி சாம்பியன் .
பல மாநில போலீசார், எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர். பி.எப்., என 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பிஸ்டல், ரிவால்வர் உட்பட பல பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு, ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை, அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படை அணியினர் தட்டிச் சென்றனர். இரண்டாம் இடத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்தனர்.
தமிழக காவல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஓத்தி வாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி வளாகத்தில், 25வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கம், பரிசுகளை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். டி.ஜி.பி., சங்கர்ஜிவால், அதிகாரிகள் பங்கேற்றனர்.
0
Leave a Reply