விளையாட்டு போட்டிகள்.27th jan
கிரிக்கெட் ரஞ்சி கோப்பை, தமிழகம் வெற்றி
இந்திய கிரிக்கெட் போர்டு (PCCI,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படு கிறது. சேலத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டி யில் தமிழகம், சண்டிகர் அணிகள் மோதின.
ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி 209 ரன் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது.
ஆறு போட்டியில், 3 வெற்றி, 3 'டிரா' என 25 புள்ளிகளுடன் தமிழக அணி 'டி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது.
பெண்கள் 'டி-20' உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'குரூப்-1' பிரிவு, 'சூப்பர்-6' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.
குரூப்-1' பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா(9 புள்ளி) அரையிறுதிக்குள் நுழைந்தது.
குத்துச்சண்டை
லாஸ் வேகாசில் நடந்த தொழில்முறை குத்துச் சண்டையில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், 'நாக் - அவுட்' முறையில் அமெரிக்காவின் ஆல்டன் விக்கின்சை வீழ்த்தினார்.
0
Leave a Reply