25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பதிவுத்துறையில் ஆவணப் பதிவிற்காக ஸ்டார் 3.0 புதிய மென்பொருள் திட்டத்தின் ஸ்பிரிண்ட் -1 செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பதிவுத்துறையில் ஆவணப் பதிவிற்காக ஸ்டார் 3.0 புதிய மென்பொருள் திட்டத்தின் ஸ்பிரிண்ட் -1 செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதிவுத்துறையில் ஆவணப் பதிவிற்காக ஸ்டார் 3.0(Star 3.0) திட்டம், ஸ்பிரிண்ட் -1 உள்ளடங்கிய காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப் பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், புலன வழி தகவல் தொடர்பு, கைபேசி செயலி, மையக் கணினி வழி சான்றிட்ட நகல் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட வில்லங்கச் சான்று வழங்குதல், விரைவுக் குறியீட்டுடன் கூடிய புதிய குறு பணப்பரிவர்த்தனை (QR Code Based Payment) ஆகிய  சேவைகளுக்கு புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 22.01.2026 அன்று துவக்கி வைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி காகிதமில்லா ஆவணப்பதிவில் (Paperless Registration) ஆவணத்தை பொதுமக்கள் எழுதி பதிவுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணைய வழியில் பணம் செலுத்தி ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகளுடன் நேரில் ஆஜராகி, சார்பதிவாளர் ஆவணத்தில் கண்ட நபர்களை அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையினை இணைய வழி மூலம் சரி பார்த்து கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணம் பதிவு செய்யப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியிலேயே பொது மக்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வகை காகிதமில்லா ஆவணப்பதிவில் அனைத்து வகை ஆவணங்களும் பதிவு செய்யப்படும்.

நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு (Presenceless Registration)

 மேற்கண்ட ஆவணப்பதிவு பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தராமலேயே மேற்படி மென்பொருளை பயன்படுத்தி  ஆவணப்பதிவிற்காக,நேரடி வருகையில்லா ஆவணப்பதிவுக்கு சம்பந்தப்பட்ட ஏழு வகையான ஆவணங்கள் கட்டுமான நிறுவனத்திடமிருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலிருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும் முதல் கிரைய ஆவணத்தைப் பொருத்து(First Sale)  பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட சொத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்தோ பத்திரத்தை இணையதள வழியாக பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.

மேலும், விற்பனை உடன்படிக்கை(Sale Agreement), குத்தகை ஆவணம் (Lease Deed/ Agreement of Lease), உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம் (Deposit of Title Deeds), இரசீது ஆவணம் (Deed of Receipt), சுவாதீனத்துடன் கூடிய அடைமான ஆவணம் (Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா அடைமான ஆவணம் (Mortgage wilthout Possession Deed),  சுவாதீனத்துடன் கூடிய மேல் ஈடு ஆவணம் (Further Charge Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா மேல் ஈடு ஆவணம் (Further Charge Mortgage without Possession Deed), அறக்கட்டளை ஆவணம் (Deed of Trust) ஆகிய 7 வகை ஆவணங்களை இணைய வழியே பதிவுக்கு தாக்கல் செய்யும்  போது சொத்தினை எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர்களின் அடையாளமானது விரல் ரேகை ஆதார் ஆணையத்துடன் சரிபார்க்கப்பட்டு இணைய வழி கட்டணம் செலுத்தியவுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியில் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே மேற்கண்ட காகிதமில்லா ஆவணப்பதிவு மற்றும் நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு ஆகியவற்றை பதிவுத்துறையின் இணையதளமான www.tnreginet.net என்ற இணையதளத்தில் ஆவண உருவாக்கம் குறித்தும், தங்களுக்கான சேவைகளை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே தாங்களே ஆவணத்தினை உருவாக்கி சேவையை எளிதாக பெற்றுக்  கொள்ளலாம் என மாவட்டப்பதிவாளர்(நிர்வாகம்) அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News