வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (18.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், பிளவக்கல் அணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5.4 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,
இராமசாமியாபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.45 இலட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் மற்றும் 15- வது மானிய நிதிக் குழுவின் கீழ் ரூ.6.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தினையும்,பின்னர், 15- வது மானிய நிதிக் குழுவின் கீழ் ரூ.13.65 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply