சுவிட்சர்லாந்து பாட்மின்டன் இந்திய நட்சத்திரங்கள்.
'சுவிஸ் ஓபன்சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் இன்று துவங்குகிறது. இந்திய நட்சத்திரங்களுக்கு ராசியான இத்தொடரில் இம்முறை பெண்கள் ஒற்றையரில் சிந்து, மாளவிகா, ஆகர்ஷி, ரக்சிதா, அனுபமாநேரடியாக முதல் சுற்றில் களமிறங்குகின்றனர். கடந்த வாரம் ஆல்இங்கிலாந்து பாட்மின்டனில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார் சிந்து.
இம்முறை தனக்கு ராசியான சுவிட்சர்லாந்து மண்ணில் களிமிறங்குகிறார் சிந்து. கடந்த 2019ல் இங்கு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இவர், 2022ல் சுவிட்சர்லாந்து தொடரில் கோப்பை வென்றார்.
பெண்கள் இரட்டையரில் திரீசா -காயத்ரி, பிரியா-ஆர்த்தி ஜோடியும், கலப்பு இரட்டையரில் சதிஷ் குமார் - வரியாத் ஜோடியும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், அனுபவ பிரனாய், கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply