டி-20 கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணிக்கு வெற்றி.
ஜிம்பாப்வே பெண்கள் அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தலைமையேற்ற முதல் போட்டியிலேயே இந்த வெற்றி கிடைத்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் ஆட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த வெற்றி சிறப்பான தொடக்கமாக அமைந்தது.
0
Leave a Reply