தேற்றான்கொட்டை
`தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி, தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்' என்பது அந்த பாடல்வரியின் பொருள். தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
தேற்றா மரத்தின் விதை தேற்றான் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தேற்றான் கொட்டையை கலங்கிய நிலையில் உள்ள நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் அந்த நீர் தெளிவாக மாறும்.வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி. நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும்.இதன் பழம் சளியை போக்கும். வயிற்றுப்போக்கை சரி செய்யும். காயங்களை குணமாக்கும். சிறுநீரக பிரச்சனைகள் சரி செய்யும் மற்றும் கண்ணில் உள்ள கோளாறுகளை நீக்கும்.
0
Leave a Reply