மாடித்தோட்டம்
.மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன் மொட்டைமாடியில்உள்ள தண்ணீர் வீட்டிற்குள் கசிந்துவிடாதபடி வாட்டர் ப்ரூப் பூச்சு கொண்டு பூசிதயார் செய்து கொள்ள வேண்டும்.ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்)ஆபத்தானவை. இவ்வகை செடிகள்தரையை துளைத்து கட்டிடத்தைசேதமடையச் செய்துவிடும். ஜல்லிவேர்கள்கொண்ட செடிகளே நாம் மாடித்தோட்டத்தில்வளர்ப்பதற்கு சிறந்தவை.
நம்குழந்தைகளுக்கும் இதில் ஆர்வம்ஏற்படுகிறது. அவர்களும் நம்மிடமிருந்துநல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறார்கள்.விவசாயிகளின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்து கொள்வதோடு இயற்கையோடு வாழ பழகிக் கொள்கிறார்கள். மேலும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதைவிட அதிகப்படியான உடற்பயிற்சி, சுத்தமான காற்றும் நம் வீட்டிலேயே கிடைக்கிறது. .
மாடித்தோட்டம் அருமையானநண்பனாகவும், நமக்கு பெரும் மனஅமைதியையும் மற்றும்புத்துணர்ச்சியையும் தருகின்றது. நமக்கு வரும் பெரும்பாலானநோய்களை விரட்டுகிறது.நமது வீட்டை வெயிலின்வெட்கையிலிருந்து ஐந்து முதல் பத்து டிகிரிவரை குறைத்து இயற்கையான ஏசியாகசெயல்படுகிறது.அதிக வெயில், குளிர்மற்றும் இரைச்சலிலிருந்து வீட்டைபாதுகாக்கிறதுநாமே வளர்த்த சத்தான காய்கறிகள்,கீரைகள் பிரஷ்ஷாக கிடைக்கிறது.
0
Leave a Reply