முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 15,914 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது.
மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- மீசலூர்
16.10.2024- பட்டம்புதூர்
17.10.2024- ஒ.கோவில்பட்டி
18.10.2024- வச்சக்காரப்பட்டி
19.10.2024 மற்றும் 20.10.2024 - சங்கரலிங்கபுரம், ஆகிய கிராமங்களில்
நடைபெறுகிறது
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- மலைப்பட்டி
16.10.2024- வதுவார்பட்டி
17.10.2024- அம்பலத்தேவநத்தம்
18.10.2024- ஆமணக்குநத்தம்
19.10.2024- கட்டங்குடி
20.10.2024- சின்னவள்ளிகுளம், ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- எம்.துரைச்சாமிபுரம்
16.10.2024- பேராபட்டி
17.10.2024- A.மீனாட்சிபுரம்
18.10.2024- காக்கிவாடான்பட்டி
19.10.2024- காரிச்சேரி
20.10.2024- M.புதுப்பட்டி. ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- மாந்தோப்பு
16.10.2024- அல்லலப்பேரி
17.10.2024- வலையன்குளம் (சந்திரன்குளம் )
18.10.2024- கழுவனாச்சேரி
19.10.2024- A.நெடுங்குளம்
20.10.2024- கம்பிக்குடி, ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்
15.10.2024-அம்மன்பட்டி
16.10.2024- சொரிகுளம்
17.10.2024- T.கடம்பன்குளம்
18.10.2024- அழகாபுரி
19.10.2024- நாலூர்
20.10.2024- வேளானூரணி
ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- கோபாலபுரம்
16.10.2024- தென்கரை
17.10.2024- புத்தூர்
18.10.2024- நல்லமங்கலம்
19.10.2024- மேலராஜகுலராமன்
20.10.2024- இளந்திரைக்கொண்டான் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- N.மேட்டுப்பட்டி
16.10.2024- முள்ளிச்செவல்
17.10.2024- நல்லி
18.10.2024- நத்தத்துப்பட்டி
19.10.2024- நென்மேனி
20.10.2024- ஒத்தையால் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- மடவார்வளாகம்
16.10.2024 மற்றும் 17.10.2024 - பிள்ளையார்குளம்
18.10.2024- அச்சந்தவிழ்த்தான்
19.10.2024- பாட்டகுளம் சல்லிப்பட்டி
20.10.2024- செங்குளம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- மீனாட்சிபுரம்
16.10.2024- மேலையூர்
17.10.2024- மிதிலைக்குளம்
18.10.2024- கண்ணகி
19.10.2024- கீழ்குடி
20.10.2024- புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
15.10.2024- கல்லமநாயக்கன்பட்டி
16.10.2024- கல்லமநாயக்கன்பட்டி
17.10.2024- எதிர்கோட்டை
18.10.2024- கனஜாம்பட்டி
19.10.2024- முத்தாண்டியபுரம்
20.10.2024- திருவேங்கிடபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது
வத்றாப் ஊராட்சி ஒன்றியம்
15.10.2024 மற்றும் 16.10.2024- W.புதுப்பட்டி
17.10.2024- கான்சாபுரம்
18.10.2024- காடனேரி
19.10.2024- கோட்டையூர்
20.10.2024- அயன்கரிசல்குளம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
மேலும் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் முறையே 15.10.2024 அன்று KPD - இல்லம், 16.10.2024 அன்று KKK - மழலையர்பள்ளி, 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய தேதிகளில் தனுஷ்கோடி பள்ளி, 19.10.2024 அன்று வள மீட்பு மையம், புல்லலக்கோட்டை சாலை, 20.10.2024 அன்று அஹமத்நகர் வாட்டர்டேங்க் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகாமில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு இதுவரை பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட திட்ட அலுவலர்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விருதுநகர்,
கைப்பேசி எண். 73730 04974 தொடர்பு கொள்ளலாம்.
0
Leave a Reply