விருதுநகர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (09.09.2025) தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் மூலம் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம், பள்ளி, கல்லூரி பயில்வதற்கான திட்டங்கள் மற்றும் சலுகைகள், பெண்கள் உயர்கல்வியை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply