25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


15 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகள் மற்றும்  ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

15 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகள் மற்றும் ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் (19.07.2026) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள்   மாவட்ட கலை விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளையும்,  மாவட்ட கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறந்த ஓவிய, சிற்ப படைப்பாளிகளுக்கு  சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.
கலை மற்றும் பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகும்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து, இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இளம் தலைமுறையினர்கள் விளையாட்டு, கலை, ஓவியம், சிற்பம் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் போது அவர்களின் தனித்திறமைகள் வளர்வதோடு நமது சமுதாயத்தை நல்ல நோக்கத் தோடு கொண்டு செல்வதற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் இதனை கடத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருது பெற்ற  செல்வி பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்) ஆகியோர்களுக்கு தலா ரூ.4000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை வளர்மணி விருது பெற்ற திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்),  திரு.பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்) ரூ.6000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்,

கலை சுடர்மணி விருது பெற்ற திரு.வே.சுடலைக்கனி(தவில்), திரு.கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), திரு.த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்) ரூ.10,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை நன்மணி விருது பெற்ற திரு.அ.கந்தவேல்(நாதஸ்வரம்), திரு.ப.மாரிராஜ்(வாய்பாட்டு), திரு.பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்) ரூ.15,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), திரு.எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), திரு.பே.காளியப்பன்(நாடகம்) ரூ.20,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்  என மொத்தம்  15 கலைஞர்களுக்கு  ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், ஓவிய, சிற்பக் கண்காட்சியில் வெற்றி பெற்ற 21 நபர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநர்(திருநெல்வேலி) திரு.து.சிவப்புகழ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜ பூபதி, அரசு அலுவலர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News