அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்தவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல், பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, சமூகத்தில் அனைத்துப் பிரிவினரை பாதுகாத்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, நான் முதல்வன் திட்டம், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன், மீண்டும் மஞ்சப்பை, நம்ம ஊரு சூப்பரு, 48 மணி நேரம் நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம், பசுமை தமிழகம், நம்ம School, TNGCC, ஆடுகளம், தமிழ்ப் பரப்புரைக் கழகம், எண்ணும் எழுத்தும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இ.மதி திட்டம், Startup TN, கல்லூரி கனவு, நம் பள்ளி நம் பெருமை, வானவில் மன்றம், அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை, Tamilnadu Climate Change Mission உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்குடன், மக்களுக்கும் அரசிற்கும் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெறுவதும் முக்கியமானதாகும்.அதனடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற 4 பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நலத்திட்டம் பெற்றதை உறுதி செய்து, கலந்துரையாடி அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் மூலம் பெற்று வரும் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விண்ணப்பம் அளித்த சிவகாசி திருத்தங்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மனுதாரர் திருமதி ரெபேக்காள் என்பவருக்கு இன்று மாற்றுத்திறனாளி அட்டை மற்றும் குடும்ப அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி கலந்துரையாடி, அவரின் கருத்துகளை கேட்டறிந்தார்.மனு அளித்த ஒரு வாரத்தில் எனக்கு மாற்றுத்திறனாளி அட்டை மற்றும் குடும்ப அட்டை கிடைத்ததாகவும், பட்டா பெற்ற எங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடி நலத்திட்டம் பெற்றதை உறுதி செய்ததற்காவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை பயனாளிகள் தெரிவித்தனர்.
0
Leave a Reply