25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மழைக்காலங்களில் மின்சாதன பயன்பாட்டில் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மழைக்காலங்களில் மின்சாதன பயன்பாட்டில் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். கான்கீரிட் கூரையிலான  கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள். இடி, மின்னலின் போது, மின்சாதனங்கள், கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் மற்றும் கிரில் அருகில் இருக்கக்கூடாது. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை அறவே தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளபப்படுகிறது. மேலும் ஈரமான கைகளோடு மின்சாதனங்களை இயக்குவதையும், குழந்தைகள் மின்சுவிட்சுகளுக்கு அருகில் விளையாடுவதையும் தவிர்க்கவும்.

 காற்று மற்றும் மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை  கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ கூடாது. மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின்இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (RCCB - Residual Current Circuit Breaker) பொருத்த  வேண்டும். மின்கசிவு தடுப்பு கருவியானது மின்இணைப்புகளில் ஏற்படும் மின்கசிவினை கண்டறிந்து உடனடியாக மின்விநியோகத்தை நிறுத்தி மின்விபத்து ஏற்படாமல் தவிர்த்திட ஏதுவாக இருக்கும்.

  மேலும், மின்தடை தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின் போது அவசரகால உதவிக்கும் மற்றும் மின்விநியோகம் சம்பந்தமானஅனைத்து சேவைகளுக்கும் “மின்னகம்” மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987-94987 என்ற எண்ணில்  24 மணி  நேரமும் தொடர்பு கொள்ளலாம்.எனவே, பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து மின்சார விபத்துக்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News